அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்- த.தே.ம.முன்னணி ஆதரவு

சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(15-10-2015) யாழ் பஸ் நிலையம் முன்பாக காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அக் கட்சியின் வடமாகாண இணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.

மேற்படி போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1_kajendran_Jaffna bus stand_15-10-2015

DSC_0003

DSC_0023

DSC_0039

மேலும் படங்கள்

Related Posts