அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

16-10-2015-1

யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்தும் 5 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts