அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்: அடைக்கலநாதன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண முன்வரவேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையினைக் கண்டிருக்கின்றது. அவர்களது கோரிக்கை நியாயமானது.

எனவே கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவிற்குகக் கொண்டு வருவதற்கு உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts