தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென கோரியுள்ள இவர்கள், தாம் தொடர்புடைய வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னரும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில், நேற்று முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளுள் 23 பேரின் சிறைத் தண்டனையை தளர்த்தி அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.