அரசியல் கட்சியிடமிருந்து எனது வீட்டை மீட்டுத் தாருங்கள்!

தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்த அவர் அளித்துள்ள முறைப்பாட்டில் ”யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகமொன்று இயங்கி வருகின்றது.

குறித்த கட்சியினரை வெளியேறுமாறு நான் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுவதாக இல்லை. எனவே அவர்களை வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts