அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழர்கள் நல்லவர்கள்: வடக்கு ஆளுநர்

தமிழ் மக்களின் சமயம், கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் தமிழ் மக்கள் நல்லவர்கள் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு, நாட்டில் இன, மத, மொழி பேதமின்றி மக்கள் வாழ்ந்தால் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதத் தன்மை மேலோங்கி இருக்கவேண்டிய நேரத்தில், இன, மத மோதல்களும் வன்முறைகளுமே தலைதூக்கியுள்ளதென வடக்கு ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் வேறு சமயத்தவர்களை திருமணம் செய்து கொழும்பில் சந்தோசமாக வாழ்ந்து வருகையில், பணமின்றி கஷ்டப்படும் மக்கள் முரண்பட்டுக்கொள்வது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.

Related Posts