Ad Widget

அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறும் வடமாகாணம்!

vote-box1[1] (1)வடமாகாண சபைக்கான தேர்தல் களம் யாழில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.யாழில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் வடமாகாண சபை பற்றிய மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்று வருகின்றது.

அத்தோடு அரசியல் கட்சிகளின் அச்சு பதிப்பகங்களில் வடமாகாண சபை பற்றிய மக்கள் விளிப்புணர்வூட்டும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி துண்டுப் பிரசுரங்கள், வர்ணக் கலண்டர்கள், வடமாகாண சபைத் தேர்தலை முன்னிலைப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் என்பன அச்சடிக்கப்படுகின்றது.

தேர்தல் ஒத்திகைக்ககாக அரசு சார்பு அரசியல்வாதிகளுடன் இராணுவத்தினரும் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்களை களத்தில் இறக்குவதற்கு பிரதான எதிர்கட்சியான ஜ.தே.கட்சி பேரம் பேசும் நடவடிக்கையில் களம் இறங்கியுள்ளது.

அத்தோடு தென்பகுதி அரசியல் கட்சிகள் யாழில் வீடுகளை வடகைக்கு எடுத்து தங்கள் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களின் மனநிலையை மற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வன்னிப் பகுதியில் முகாமிட்டு கட்சிதமாக காய்நகர்த்திக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்களின் உண்மையான முகம் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் பறை சாற்றும் என்பதில் ஜயமில்லை.

Related Posts