அரசியல்வாதிகளை வாழ்த்தும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

court-low-actionஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை வாழ்த்தும் புதிதாக நியமனம் பெற்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவினால் சபையில் நேற்று முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணையினை சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வழிமொழிந்ததை அடுத்து சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேரணை நிறைவேறியது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டித்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பிரேரணை சபையில் நிறைவேற்றியது.

பிரேரணையினை முன்வைத்து உரையாற்றிய வடமாகாண கல்வி அமைச்சர், ‘புதிதாக நியமனம் பெற்ற அரசாங்க உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடைய பெயர்களை வாழ்த்தி விளம்பரம் செய்வதன் மூலம் அவர்கள் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்’ என்றார்.

‘அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் இத்தகைய விளம்பரங்கள் செய்பவர்களுக்கு எதிராக திணைக்களங்களின் செயலாளர்கள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts