அரசியல்வாதிகளுக்கு எமனாகும் விஜய் ஆண்டனி!

சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் சினிமா கேரியர் பரபரப்பாகி விட்டது. அதனால் அவர் சின்ன பட்ஜெட்டில் நடித்து வந்த சைத்தான் படமும் இப்போது பிரமாண்டப்படுத்தப்பட்டுள்ளது.

vijay-antony22

அதையடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடித்து வரும் எமன் இன்னும் பெரிய மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதோடு, இந்த படத்தில் முன்னணி ஹீரோக்களைப் போன்று அதிரடியான மாஸ் கதையில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

அதாவது இந்த படத்தில் அவர் அரசியல்வாதிகளை அட்டாக் பண்ணும் கதையில் நடிக்கிறாராம். அந்த வகையில், ஜெயிலுக்குள் அவர் அடைக்கப்படுவது போன்ற காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனபோதும், இது முழு அரசியல் படமில்லை என்கிறார்கள்.

அதேசமயம், விஜய் ஆண்டனியை அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாற்றும் கதையாம். அந்த வகையில், ஆக்சன் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வரிந்து கட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, இதற்கு முன்பு நடித்த நான், சலீம் படங்களைப்போன்ற சீரியசான தோற்றத்திலேயே படம் முழுக்க பயணிக்கிறாராம்.

Related Posts