அரசியலில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்?

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன.

samurththy-mullaiththeevu

நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை ‘எமது தலைவரே வருக’ என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவுத்தலையும் மீறி சில அரசியல்வாதிகள் அரச உத்தியோகத்தர்களை தமக்கு சார்பாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதேவேளை,இன்று முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவை வரவேற்க அப்பகுதி பொதுமக்கள் சிலரை உதவித் திட்டம் வழங்குவதாக சிலர் நேற்று அழைத்துவந்தனர் என்றும் தெரியவருகிறது.

Related Posts