நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைககு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு கூடுதல் பங்களிப்பு செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள் தோல்வியுற்றால் அதற்கான பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் யாப்பு உருவாக்கப்பணி வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும், அதுவே தனது அரசியல் பயணத்தின் இறுதியாக இருக்குமென நம்புவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் யாப்பு உருவாக்கப் பணி தோல்வியுற்றால் அதனை ஏற்பதற்கு தன்னையும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் தவிர வேறும் யாரும் தயாராக இல்லையென குறிப்பிட்டுள்ள சுமந்திரன், தான் அரசியலிலிருந்து விலகினாலும் சம்பந்தன் விலகுவதற்கு இடமில்லையென மேலும் தெரிவித்துள்ளார்.