அரசால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவம் பல வழிகளிலும் பாடுபடுகிறது.யாழ்.தளபதி

அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது என்று யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்துக்கு கடந்த புதன்கிழமை வருகை தந்த, செக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவினர் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியை பலாலி பாதுகாப்புப் படைத் தலைமை யகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதன் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “கஷ்டப்பட்டுப் பெற்ற அமைதியை யாழ். குடா நாட்டில் தொடர்ந்து பேணுவதற்கும், சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொலிஸாருக்கு உதவும் வகையிலும் இராணுவத்தினர் செயற்படுகின்றனர்.

போருக்குப் பின்னரான காலத்தில் இது இராணுவத்தினரின் முக்கிய செயற்பாடாக இருக்கின்றது என்று யாழ். படைத்தளபதி இந்தக் குழுவினரிடம் விளக்கியுள்ளார். இதன் போது செக்குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர், இராணுவப் பிரசன்னம் தொடர்பில் இராணுவத் தளபதியிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தளபதி, 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் யாழ். மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது.

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டு, கொழும்பிலிருந்து இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கு அமைவாகவே எதிர்காலத்தில் படைக்குறைப்பை மேற்கொள்ள முடியும்.

அரசால் யாழ். மாவட் டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இராணுவம் உதவிகளைச் செய்து வருகின்றது. அத்துடன் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகளிலும் பாடுபடுகிறது. என்று கூறினார்.

Related Posts