அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்பட கூடாது – சிறிதரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும். அரசாங்கம் இது போன்ற முட்டாள்தனமான செயற்பாடுகளை செய்யக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நேற்றய தினம் (25) தெரிவித்தார்.

Sritharan

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த நாட்களில், பல்கலைக்கழகத்துக்குள் மாவீரர் தின சுவரொட்டிகள் மற்றும் மாணவர்களை எச்சரிக்கை செய்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவங்கள் நடந்தேறின.

இந்த நடவடிக்கைகள், இறந்தவர்களை அனுஷ்டிக்கும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் முட்டாள்தனமான நடவடிக்கைகள் ஆகும்.

தமிழ் மக்கள் அமைதியாக இருக்கவேண்டும். தமிழ் மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூருவதை தடுக்க முடியாது.

இறந்தவர்கள் ஒவ்வொருவரின் தாயும், தந்தையும், சகோதரர்களும் இறந்தவரை நினைவுகூறும் உரிமையை யாரும் தடுக்க முடியும். அந்த உரிமையை பறித்தால் அது மனித நேயத்திற்கு எதிரானதாகவே அமையும்.

சிங்கள மக்கள் ஜே.வி.பியிலிருந்து இறந்தவர்களின் தினத்தை கொண்டாடுகிறார்கள். மேலும், அநகாரிக தர்மபால போன்ற பெரியவர்கள் இறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். வீரபுருஷர்களை நினைத்து கொள்வது இயல்பானது.

சிங்கள மக்களும் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அதனை சிங்கள தலைவர்களே குழப்புகின்றனர் என சிறிதரன் மேலும் கூறினார்.

Related Posts