அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடங்க எதிர்க்கட்சி தீர்மானம் !

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கான சேவைகள் என அவர் கூறியுள்ளார்.

பிரச்சினைகள் தீவிரமடைந்தால் மட்டுமே அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் தீர்வுகளை தேடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டுமென சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பலமான அரசியல் சக்தியை உருவாக்க அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார்.

நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Related Posts