அரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்

தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்தது. குறித்த நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ள அருட்தந்தை சக்திவேல் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதன் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் முழு நாட்டிற்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானதென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், இச்சட்டத்திற்கு எதிராக போராடுவோம் என்றும் தற்போது உண்ணாவிரத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் போராட்டம் வெற்றிபெறவேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

Related Posts