புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை மேமம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் அங்குள்ள விகாரையயான்றுக்குச் சென்றார். இங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசுக்கு சர்வதேச சமூகம் பாரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்றும், மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நன்மை கருதி உரிய முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.