ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து கோலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று திரை உலகினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் யார், யார் கலந்து கொண்டுள்ளனர் என்பதை பார்ப்போம்.
உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்தில் அம்மாவின் தீவிர ஆதரவாளரான சமக தலைவர் சரத்குமாரை காண முடிந்தது.
அம்மா, அம்மா என்று ஜெயலலிதா புகழ்பாடும் நடிகர் ராமராஜன், நடிகர் குண்டுகல்யாணம் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஜெயலலிதா காலத்து நடிகையான வெந்நிற ஆடை நிர்மலா உண்ணாவிரதம் இருந்தார்.
இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, சத்யராஜ், மனோபாலாவும் அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி, கமல் போன்ற சீனியர்களையும், அஜீத், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களையும் காணவில்லை.
விஷால், தனுஷ், சிம்பு, ஜீவா என்று இளம் நடிகர்களையும் போராட்ட பந்தலில் காணவில்லை.