“அம்மா”வுக்காகப் பறிபோன 14 உயிர்களின் பட்டியல்….!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறைவாசத்தால் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் 14 பேர் இதுவரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

jeyaa

மேலும் சிலர் தீக்குளித்தும் தற்கொலை செய்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

  • கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பதவியிறங்கியபோதும் ஒரே நாளில் 3 பெண்கள் தீக்குளித்து உயிர் நீத்தனர்.
  • சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என்.பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (58) ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வந்து தீக்குளித்து உயிரிழந்தார்.
  • திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஜோனஷா (19) என்ற கல்லூரி மாணவி, துக்கத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (47) மனம் உடைந்துமாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
  • நாகை மாவட்டம், வேதாரண்யம்-நாகை மெயின்ரோட்டில் கோர்ட் அருகே கோவிந்தராஜ் (56) என்பவர் தீர்ப்பை கேட்டதும் மாரடைப்பில் மயங்கி விழுந்து இறந்தார்.
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தை சேர்ந்த பாலம்மாள் (52) தீர்ப்பை அறிந்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
  • ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மாரியப்பனும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
  • நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாலாயிரம் (48) என்பவர் பஸ் முன்பு பாய்ந்து உயிர் நீத்தார்.
  • திருவோணம் அருகே உள்ள காட்டாத்திசித்தன் தெருவை சேர்ந்தவர் பழனியப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
  • கரூர் மாவட்டம் நெடுங்கூர் கிழக்கு கஸ்பா காலனியை சேர்ந்த ராமசாமி (60) மூலக்காட்டனூரை சேர்ந்த அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி வார்டு செயலாளர் வேலுச்சாமி (50) ஆகியோரும் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
  • தளவாபாளையத்தை சேர்ந்த ஜீவா என்ற பாக்கியராஜ் (40) என்பவர் ஜெயலலிதா தீர்ப்பு செய்தியை டிவியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
  • சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்ற அ.தி.மு.க. தொண்டர் தீர்ப்பு வெளியானதும் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
  • ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் நெல்லுகுத்து காடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (40). தறிபட்டறை தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரும் தற்கொலை செய்து கொண்டார்.
  • சேலம் ஓமலூர் அருகில் உள்ள மோரூர் கே.எம்.புதூரை சேர்ந்தவர் ஜேக்கப் என்கிற பழனிச்சாமி (42). டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை பார்த்து பழனிச்சாமி மாரடைப்பால் மரணமடைந்தார்.

தவறு செய்ததற்குக் தண்டனை கிடைத்துள்ளது. தான் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க இன்னமும் கூட ஜெயலலிதாவுக்கு சட்டப்பூர்வமான பல வழிகள் உள்ளன. எனவே தற்கொலை போன்ற முட்டாள்தனங்களை மக்கள் நாடக் கூடாது.. தீர்ப்பு திருந்தி வரலாம்.. ஆனால் போன உயிர் திரும்ப வருமா.. யோசியுங்கள் அதிமுகவினரே!

Related Posts