அம்பாந்தோட்டை விவகாரம், மகிந்தவிடம் விளக்கம் கோரினார் சீனத் தூதுவர்!

அம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா விளக்கம் கோரியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகள் ஒதுக்கீட்டுக்கு மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார்.

அதற்கு, அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் திட்டத்தை கூட்டு எதிரணியினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts