அமைதிச் சூழல் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

இன்றுள்ள அமைதிச் சூழலைப் பாதுகாத்து அதனை வளர்த்தெடுப்பதன் ஊடாகவே எமது பகுதிகளில் அபிவிருத்திகளை மென்மேலும் மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

office 3

கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் அலுவலகத்தில் இன்றைய தினம் (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணக்க அரசியல் ஊடாக மக்களுக்கு பயன்களையும் நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருவதே எமது நோக்காகும்.

இதைவிடுத்து, சுயலாப அரசியல்வாதிகளைப் போன்று எதிர்ப்பரசியலை நடாத்தி இருப்பதையும் இல்லாதொழிப்பது எமது நோக்கல்ல என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற நீங்கள் சமூகத்திற்கு முன்னோடிகளாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்க வேண்டும்.

office 1

கடந்தகால தவறான அரசியல் தலைமை மற்றும் வழிநடத்தல் காரணமாகவே எமது மக்கள் அளவிடமுடியாத துன்ப துயரங்களை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

ஆனால், இன்று அமைதியான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் இதைபாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மக்களையும் சார்ந்து இருக்கின்றது.

எனவே, எமது மக்கள எதிர்கால வளமான வாழ்வுக்காக இரத்தத்தை அல்ல வியர்வை சிந்தி முன்னேற்றம் காண வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts