விவசாய ,சூழல் அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் குடிபானங்களை பரிமாறும் போது ”பெப்சி ”கொக்கோ கோலா” போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென் பானங்களை தவிர்க்குமாறும் பதிலாக உள்ளுர் பானங்களை பரிமாறுமாறும் விவசாய ,சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் பணித்துள்ளார்.
நேற்று தனது அமைச்சு பதவி பொறுப்புக்களை பொறுப்பேற்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது. இயலுமானவரை இவ்வாறான குளிர்பானங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் எமது பணம் எமக்குள்ளேயே சுழற்சியுடன் நின்று கொள்ளும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தயாரிப்பில் உருவான பழரசங்களைப் பயன்படுத்த வேண்டும் – என்று கூறினார்