அமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு

அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்பதற்கு ஏகமனதாகத் தீர்மானம் எடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறுவதில் எவ்வித உண்மைகளுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சுப் பதவியை ஏற்கவுள்ளார். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பொலிஸ் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, அவர் அமைச்சுப் பதவியை ஏற்க முடியும் என, பிரதமர் தெரிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பிரதமர் கூறியதாகவும் பௌஸி எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts