ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தந்தை செல்வாவின் 36வது நினைவுதினம்; 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் நினைவுப் பேருரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வு தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.