சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ச, ரவி கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.