அமைச்சர் மனோவின் அறிவுறுத்தலில் ஆளுனர் தமிழில் மீண்டும் பதில் கடிதம் !

நேற்று மாணவர் ஒன்றியத்தினால் ஆளுனருக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிங்கள கடிதத்திற்கு பதிலாக ஆளுனர் இன்று தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கான நடவடிக்கையினை மொழிகள் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் எடு்த்திருந்தார்.

இதுதொடர்பாக அவர்   தனது முகப்புத்தக பக்கத்தில்  கூறியதாவது  என்னை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அறிவித்தபோது, அந்த சிங்கள கடிதத்தை, உங்களுக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்புங்கள் என நான் மாணவர்களிடம் சொன்னேன். அதையடுத்து ஆளுனர் ரெஜினோல்ட் குரேக்கு தொடர்பை ஏற்படுத்தி இதை சரிசெய்யும்படி நேரடியாக அவரிடம் கூறியுள்ளேன். தமிழ் மொழிபெயர்ப்புடன் அந்த கடிதத்தை மீண்டும் மாணவர்களுக்கு அனுப்புவதாக அவர் எனக்கு உறுதியளித்திருந்தார் . தற்போது மாணவர்கள் தொடர்பு கொண்டு தமக்கு கடிதம் தமிழில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

tamil

Related Posts