சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் விஜயம் செய்துள்ள நிலையிலேயே வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
மேற்படி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறை, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியன தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கொண்டுவந்தார்.
இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.