அமைச்சர் சத்தியலிங்கத்தை அகற்றுவதில் முதல்வர் தீவிரம் – இன்றைய உரையில் தொனித்தது.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேற்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும் என கண்டிப்பான உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன் உரையாற்றிய முதலமைச்சர் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதிலேயே ஊழல் செய்தால் இது நோயாளிகளையும் மக்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவ ஊழல் குறித்து முதலமைச்சர் குறிப்பிட்டவை அண்மையில் எழுத்து மூல உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பல கோடி பெறுமதியான மருத்துவ உபகரணக் கொள்வனவு ஊழல் குறித்தே என தகவலறிந்த வட்டாங்கள் தெரிவித்துள்ளன. இதில் பல தலைகள் சிக்கிவிடும் என்பதாலேயே குறித்த சுகாதார அமைச்சரைக் காப்பாற்ற தமிழரசுக் கட்சி கங்கணங்கட்டி நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரைப்பொறுத்தவரை அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒத்துக்கொண்டதே சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தை அகற்றுவதற்காகவே என்றும் அதற்காக வே தன்னை அகற்றுவதற்காக உறுப்பினர்கள் செய்த சதித்திட்டத்தில் தாமாக வீழ்ந்து காய்நகர்த்த முற்பட்டதாகவும் இது  உள்நோக்கம் கொண்ட விசாரணைக்குழு செய்த சதியினால் முதலமைச்சருக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் நிலைக்கு கொண்டு வந்திருந்தது. வேறு வழியின்றி குற்றம் நிரூபிக்கப்படாத அவரது வலது கையான அமைச்சர் ஐங்கரநேசனையும் பலியிட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும்  சத்தியலிங்கம் அவர்களை நீக்கஅவருக்கு வேறு வழி இருக்கவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைத்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு மாகாண சபையில் அவர் உரையாற்றியபோது இதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார் தன்னுடன் நெருக்கமாக உள்ள அமைச்சரை அகற்றி தன்னை அகற்றுவதற்கான சதி என்று குறிப்பிட்டிருந்தார்.  முதலமைச்சர் பதவியை தியாகம் செய்யச்சொன்னதற்கிணங்க ஏற்கனவே அமைச்சர் ஐங்கரநேசன் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எனவே முதலமைச்சர் சத்தியலிங்கத்தை அகற்றாமல் ஓயமாட்டார் என்பது மட்டும் தெளிவாகின்றது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

Related Posts