அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு முன்னிலையாகாவிட்டால், அவர்கள் மீதான விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது அமைச்சர்கள் இருவர் மீதும் விசாரணை நடாத்தப்படுமெனவும், தேவையேற்பட்டால் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.