மாத்தறை புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கலால் சட்டத்தை மீறும் நபர்களை தடுத்து வைப்பதற்காக மதுவரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அறை ஜனாதிபதியால் இதன் போது திறந்துவைக்கப்பட்டது.
மேலும் இச்சந்தர்ப்பத்தின் போது சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி குறித்த சிறையில் கேளிக்கையாக அடைத்தமை குறிப்பிடத்தக்கது.