அமைச்சர்களின் பாதுகாப்பு அரைவாசியாக குறைப்பு

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள், அரசாங்கத்தின் வாகனத்தை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே யோசனையை முன்வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Posts