பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தாக்குதல் உரையை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இடையில் தடுத்து அவருக்கு அறிவுரை வழங்கிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஊவா மாகாண சபைத்தேர்தலுக்காக மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அமைச்சர் மேர்வின் சில்வாவும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் தமது உரையில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.வி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து அவரை தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசினார்.
இதனை அவதானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரின் பேச்சை இடைநிறுத்தியதுடன் எவரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கிப்பேசக்கூடாது என்று பணித்தார். ஜனாதிபதியின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மேர்வின் தனது உரையை தொடர்ந்தார்.