Ad Widget

அமைச்சரவை மாற்றம் தேவையில்லை! வினைத்திறனின்மைக்கு 13 ம் சரத்தில் தான் பிழை- சம்பந்தன்

யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று மாலை, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது  பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை மாற்றத்திற்கான கோரிக்கையினை சம்பந்தர் நிராகரித்தார். அமைச்சர்களும் முதலமைச்சரும் திறமையானவர்கள் . வினைத்திறனின்மைக்கு அரசியலமைப்பின் 13 ம் சரத்தே காரணம் எனவும் அவர்களை குறை கூற முடியாது என்றும் தெரிவித்தார்

இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நாகபாம்பு படம் எடுக்கிறது என்பதற்காக இங்கு சில சாரைகள் சிரட்டையினை கொண்டு  படம் எடுக்க முயல்வதாக அமைச்சரவை மாற்றக்கோரிக்கையாளர்களை சாடினார்

விந்தன் கனகரத்தினம் கருத்த தெரிவிக்கையில் அமச்சரவை மாற்றுவதாயின் அனைவரையும் மாற்றவேண்டும் ஒருசிலரை இலக்கு வைப்பது நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.

sampanthan-jaffna-

இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் 23 பேர் பங்குபற்றினர். வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.

Related Posts