ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்னதாக அவசர அமைச்சரவை கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் வெளியேற்றம் என்பன குறித்து ஆராயப்படவுள்ளன.
ஜாதிக ஹெல உறுமய, அரச கட்சியிலிருந்து வெளியேறிய மறுதினம் இந்த கூட்டம் இடம்பெறுவது முக்கியமானது.