அமெரிக்க போர்க்குற்ற நிபுணருடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு

சிறீலங்காவுக்கு திடீர் பயணமொன்றினை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

Todd-Buchwald-colombo-2

இதன்பின்னர் வெள்ளிக்கிழமை மாலை சிறீலங்காவுக்கான பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன ஹெற்றியாராச்சியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பின்போது சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரும் கலந்துகொண்டார். மேலும் இந்தச் சந்திப்புத் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கருத்துத் தெரிவிக்கும்போது இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதைனயடுத்து வெள்ளிக் கிழமை மாலை வடக்கு ஆளுநரை கொழும்பில் சந்தித்துள்ள ரொட் புச்வால்ட் நீண்ட நேரக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.பொறுப்புக்கூறல் தொடர்பிலேயே இச்சந்திப்பு நீண்டநேரமாக பேசப்பட்டது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts