அமெரிக்க பிரஜையிடம் இருந்து 300 அமெரிக்க டொலர்களை சூறையாடிய இளைஞர்கள்!

கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை 2 இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க பிரஜை கோண்டாவில் பகுதியில் பயணித்துள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் அவரிடம் இருந்த பணத்தினை பறித்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிப்படைந்த அமெரிக்க பிரஜை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts