பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். இவர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மி சரமாறியாக சுட்டார்.
இதனால் பலத்த காயம் அடைந்த கிரிம்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைபலனின்றி அவர் இறந்தார். துப்பாக்கியால் சுட்ட மர்மநபரை கிரிம்மியின் சகோதரர் தடுக்க முயன்றபோது அந்த மர்ம நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.