அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வௌியாகிய வண்ணம் உள்ளன.
கடும் போட்டி நிலவும் பல மாநிலங்களில் வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வியுடன் உலகளாவிய ரீதியில் முடிவுகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
இதன் அடிப்படையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை பின் தள்ளி ஹிலரி கிளின்டன் சற்று முன்னர் வரை 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.