அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் இந்த பெறுமதி வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதுடன், இந்த நிலைமை எதிர்வரும் நாட்களிலும் தொடராலம் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts