அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின்படி பராக் ஒபாமா 301 வாக்குகளைபயும் மிட் றொம்னி 206 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின், 50 மாகாணங்களில், அதிபருக்கான தேர்தல் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபைக்கு, 435 பேரும், செனட் சபைக்கு, 100 பேரும், வாஷிங்டன் சார்பில், மூன்று பேரும் என, 538 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.