அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானி!

அமெரிக்க அழகிக்கான போட்டியில் 25 வயது விஞ்ஞானியான காரா மெக்குல்லாக் வெற்றி பெற்றார்.

அமெரிக்க அழகிக்கான போட்டி, லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றியாளர் யார் என்ற அறிவிப்புக்காக அரங்கமே அமைதியுடன் காத்திருந்தபோது, காரா மெக்குலாக்கின் பெயர் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூக்ளியர் ஒழுங்காற்று ஆணையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் காரா மெக்குலாக், வேதியில் பட்டதாரியாவார். நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவரான இவர், சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு சிறப்பாக பதில் அளித்ததாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அழகியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், பிரபஞ்ச அழகிக்கான போட்டியில், அமெரிக்கா சார்பில் காரா மெக்குலாக் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts