அமெரிக்கா கோயிலில் ரஜினி வழிபாடு

கபாலி படப்பிடிப்பு முடிந்ததும் அமெரிக்காவுக்கு பறந்தார் ரஜினி. அங்கு ஓய்வில் இருந்து வரும் ரஜினியின் உடல்நிலை குறித்து கடந்த ஒரு மாதமாக ஏராளமான வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன. ரஜினி நலமுடன் இருப்பதாகவும், அவரைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரஜினியின் குடும்பத்தினர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

rajini-1

தொடர்ந்து ரஜினி பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரஜினியை பற்றிய வதந்திகள் பரவுவது ஓய்ந்தது.

rajini-2

ஜூலை 20ம் தேதி அமெரிக்காவிலிருந்து ரஜினி இந்தியா திரும்புவார் என கூறப்பட்டது. ஜூலை 22ம் தேதி கபாலி படம் ரிலீசாக உள்ளதால், ரஜினி எப்போது நாடு திரும்புவார் என எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Capture

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சச்சிதானந்தர் கோயிலில் ரஜினியும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் வழிபாடு செய்துள்ளனர். இதுதொடர்பான போட்டோவை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போடோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் ரஜினி பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts