அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்திவிட்டார் – அமெரிக்க மக்கள்

அதிபர் ஒபாமா அமெரிக்காவை பலவீனப்படுத்திவிட்டார் என்று அந்நாட்டின் 55 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Obama

அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, ‘ அதிபர் ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?’ என்று மூன்று நாள் கருத்துக்கணிப்பு நடத்தியது. அமெரிக்க மக்கள் 1,006 பேரிடம் தொலைபேசி மூலமாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில், அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்தி விட்டதாக 55 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கா பலமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

அதேபோல ஒபாமாவின் தலைமைத் தகுதி மோசமானது என்று 61 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். சிறந்தது என்று 39 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

மேலும், ஒபாமாவின் வெளியுறவு கொள்கை குறித்த கேள்விக்கு 56 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்னர். 33 சதவீதம் பேர் மட்டுமே திருப்தியாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை 58 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர். 39 சதவீதத்தினர் ஆதரித்துள்ளனர். எனவே, அமைரிக்க மக்களிடம் ஒபாமாவின் செல்வாக்கு குறைந்திருப்பது இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Posts