கலை, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அறிவியல், மருத்துவம் மற்றும் அமைதி உள்ளிட்ட பலதுறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
என்றாலும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுதலே உலகின் மிக உயரியதாக கருதப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்பரிசு அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களையும், அது சர்வதேச அளவில் செய்யும் ஒன்லைன் தகவல் திருட்டுக்களையும் வெளியிட்டு, அந்நாட்டுக்கு மாபெரும் சவாலாக விளங்கிய மனிதநேய ஆர்வலர் எட்வேர்ட் ஸ்நோடனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு எட்வர்ட் ஸ்நோடன் பெயரை அறிவித்துள்ள நோபல் தேர்வுக் குழுவினர் – “அவர் செய்த சிறப்பான செயல்களுக்காக ஸ்நோடன் துரோகியாகவும், குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். ஆனால், சர்வதேச அளவில் இன்டர்நெட், செயற்கைக்கோள் வழியாக நடைபெறும் சில, பல மறைமுக உளவு செயல்களை வெளியிட்டு அவர் உலகின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் நடைபெறும் பல மறைமுக பனிப்போர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டதுடன், அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட அரிய பணிகளை ஆற்றிய ஸ்நோடனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசுக்கான ஐந்து நபர் கொண்ட தேர்வுக்குழு, மிகவும் சுதந்திரமாக செயற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளது” என்றனர். ஸ்நோடன் இனி ஒவ்வொரு நாடாக ஓடி ஒளிய வேண்டிய தேவை இருக்காது.