அமெரிக்காவில் முஸ்லிம் மாணவி அடித்துக்கொலை

அமெரிக்காவில் 17 வயதுடைய நப்ரா ஹுசைன் என்ற முஸ்லிம் மாணவியொருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேஸ் போல் மட்டையினால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மார்ட்டின் டொரஸ் எனும் இளைஞனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் அமெரிக்காவின் வேர்ஜினியாவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts