அமெரிக்காவில் புயலு டன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கும், அதனால் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதில் விர்ஜீனீயா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 8 வயது சிறுவனும், கைக் குழந்தையும் அடங்கும். இதை தொடர்ந்து விர்ஜீனியாவில் 44 பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.அந்நாட்டின் 55 பகுதிகளுக்கு 44 அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கு என அந்நாட்டு ஆளுநர் ஏர்ல் ராய் டோம்ப்ளின் கூறியுள்ளார்.
வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்கிறது. எனவே, அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
500 பேர் வணிக வளாகத்துக்குள் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.