அமெரிக்காவில் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தன்னுடைய பிறந்த தினத்தை ஜூன் 22 கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் விஜய் தன்னுடைய பிறந்த நாளில் சென்னையில் கொண்டாடுவார்.

vijai2

அதுபோல் ரசிகர்களை சந்தித்தும், பல நலத்திட்ட உதவிகளை நேரடியாக செய்வதையும் கடந்த சில வருடங்களாகவே விஜய் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு தன் குடும்பத்துடன் அமெரிக்கா செல்கிறார் விஜய். அங்கு குடும்பத்துடன் மட்டும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

விஜய் தற்போது நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. எனவே, ஐதராபாத்தில் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் என்று அமெரிக்காவில் கொண்டாட விஜய் முடிவு செய்திருக்கிறார்.

அமெரிக்காவில் 15 நாட்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து பின்னர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

Related Posts