அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு – 16 பேர் பலி

அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியை தேடி விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரின் புகைப்படத்தை தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட லெவிஸ்டன் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அந்நாட்டு மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது.

Related Posts