அமெரிக்காவில் இடம்பெற்ற விசேட ஒலிம்பிக் போட்டியில் சிவபூமி மாணவர்கள் சாதனை

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்துகொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

sivapoomi-2

சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.

விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

165 நாடுகளில் இருந்து 6500 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டிகள் 1968 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகின்றன.

முதலாவது போட்டி சிகாகோ நகரில் நடைபெற்றது. இவ்வாண்டில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹெற்றியாதுர பெர்ணாந்து, பிரீத்திகா கமகே, சுரோகா கம்மடகே, அக்கோ ஜெயவர்த்தன, ஜெயசந்திரன் மனோஜன், அரசகுலசூரியன் மயூரன் ஆகியோர் சுவட்டு நிகழ்வுகளிலும் திலான் விதாரண பட்மின்ரன் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

சிவபூமியில் இருந்து கலந்துகொண்ட மாணவர்களுக்கான பயிற்றுவிப்பாளராக யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் விரிவுரையாளர் ம.இளம்பிறையன் செயற்பட்டுள்ளார்.

sivapoomi-1

Related Posts