தமிழர் வரலாற்றில் தமிழீழம் தான் தீர்வென்று மேடைகளில் எழுபதுகளிலேயே முழங்கிய தமிழ் அரசியல் தலைவர் தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். தமிழர் வரலாற்றில் இவருக்கென்றும் ஒரு பக்கத்தை காலம் திறந்துள்ளது. மேடைப் பேச்சுக்கும், இவரது செயல் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. இவர்கள் போன்றவர்களது ஒரே குறிக்கோள் பதவி நாற்காலியே. (தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் போல) அந்த நேரத்தில் இவரது பேச்சை கேட்பதற்காகவே இளையோர் கூட்டம் அலைமோதும் என்பார்கள்.இவரையே தமிழர் தேசம் நம்பியிருந்த போதும் உணர்ச்சி பொங்க தமிழீழம் தான் தீர்வென்று வெளியில் பேசிய போதும் செயலில் எதுவும் நடை பெறவில்லை. சமகாலத்தில் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி, இளையோரை அதன் பக்கம் திசை திருப்பியதால், இவர்கள் போன்றவர்களின் மேலிருந்த மாயை விலகி மக்கள் இவர்களை ஒதுக்க ஆரம்பித்தார்கள். விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி குறிப்பாக புலிகளின் வளர்ச்சி,இவருக்கு அவர்கள் மேல் மறைமுகமாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி இருந்தது.
அதன் பின்னரான காலங்களில் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்த போது இவர்களும் தாமாகவே வாய்வீச்சை குறைத்து “விலாங்கு மீனாக” மாறி இருந்தார்கள். இதன் பின் இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்த போது மௌனமாக இருந்த இவர்கள், புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதல் தொடங்கிய போது அழிந்தார்கள் புலிகள் என்று தமக்குள் கொண்டாடியதும் புலிகள் காதில் எட்டியது.
ஹிந்திய இராணுவத்துடன் உக்கிரமாக போரில் பல ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப் பட்டார்கள். பல ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டார்கள். எமது மக்கள் குருவி சேர்த்தது போல சேர்த்த பல ஆயிரம் கோடி சொத்துகள் கொள்ளையடிக்கப் பட்டும், சேதமாக்கப் பட்டது. பல நூறு இளையோர் சித்திரவதை செய்து கொல்லப் பட்டனர். அத்தோடு இவர்களோடு இயங்கிய துரோக கும்பல்களான EPRLF,TELO, ENDLF போன்றவையும் தம் பங்கிற்கு கோர தாண்டவம் ஆடினர்.
இந்த நேரத்தில் இந்திய அரசு தாங்கள் ஈழத்தில் செய்யும் படுகொலைகள் சர்வதேச மட்டத்தில் விசனத்தை ஏற்படுத்தியமையாலும், தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பை அடக்குவதட்காகவும் மாகாணசபை தேர்தல் ஒன்றை நடத்தி தாங்கள் போன காரியம் நிறைவேறி விட்டதாக காட்ட முற்பட்டனர். இந்திய அரசின் கபடம் புரிந்த புலிகள் யாரையும் இந்த தேர்தலில் பங்கு பற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஈரோஸ் அமைப்பு போட்டி இட்டது.
அந்த நேரத்தில் தான் தமிழர் விடுதலை கூட்டணியினர் கிழக்கு மாகாணத்திலும் இந்திய அரசுடன் இயங்கிய தேசவிரோத சக்தியலான EPRLF, TELO,ENDLF பகுதிகளிலும் இணைந்து ஒரே அணியில் போட்டி இட ஆயத்தம் செத்தனர். இவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை ராஜீவ் காந்தியே நேரடியாக அமிர்தலிங்கத்திர்கு கொடுத்திருந்தார். அதில் முக்கியமான வாக்கியம் “இன்னும் கொஞ்ச காலத்தில் புலிகளமைப்பு அழிக்கப் பட்டுவிடும்” என்பதே ஆகும். அதை நம்பிய கூட்டமைப்பினர் புலிகளின் பகிஸ்கரிக்கும் வேண்டுகோளை நிராகரித்தனர்.
அதன் மூலாம் மறைமுகமாக புலிகளுக்கு எதிராக செயல் பட்டவர்கள் முதல் முறையாக நேரடியாக புலிகளை எதிர்க்கும் முடிவை கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்திருந்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து புலிகளின் சார்பில் 2ம் லெப்.பீற்றர் (அலோசியஸ்) கூடமைப்பின் மேல் மட்ட உறுப்பினரான முன்னாள் MP யோகேஸ்வரனை சந்தித்து தங்கள் எதிர்ப்பை நேரடியாக தெரிவித்தார். பீற்றர் என்பவரே கூட்டமைப்புக்கும், புலிகளுக்குமான தொடர்பாளராக யோகேஸ்வரனை சந்தித்து வந்தார்.
புலிகளின் முதலாவது எச்சரிக்கையை யோகேஸ்வரன் கூறிய போது அதை கருத்தில் எடுக்காது உதாசின படுத்தினர் கூட்டமைப்பினர். அந்த நேரங்களில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னர் மூன்று முறை எச்சரிக்கை விடப்படும். அதை அந்த நபர் உதாசின படுத்தினால் தான் புலிகளின் தண்டனை நிறை வேற்றுவர். இது அவர்கள் திருந்துவதற்காக புலிகள் கொடுக்கும் சந்தர்ப்பம். கடைசி வரை இந்த சந்தர்ப்பம் ஏனையோருக்கும் கொடுக்கப் பட்டது.
புலிகளின் எச்சரிக்கையை மீறி போட்டி இட்ட கூடமைப்பு கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்தித்தது. தமிழீழ மக்களும் தேர்தலில் பங்கு பற்றாது வீட்டினுள் முடங்கினர். இந்திய இராணுவத்தால் வில்லங்கமாக ஒட்டு போடா வட்புருத்தியவர்களும், புலிகளின் கண் யாடை பெற்ற ஈரோசுகுக்கே வாக்களித்தனர். இதை எற்காத இந்திய அரசு தாங்கள் முன்னமே போட்ட திட்டத்தின் படி EPRLF அணியின் வரதராஜபெருமாளை வெற்றி பெற்றதாக கூறி முதலமைச்சராக அறிவித்தது.
பெயருக்கு ஒரு அரசை இந்திய அரசு நிறுவிய நேரத்தில் சிங்கள பகுதிகளில் பெரும் பான்மையை பெற்று பிரேமதாசா ஜனாதிபதியாகி இருந்தார். அவரும் தமக்கு இடைஞ்சலாக இருந்த JVP ஆயுத முனையில் அழித்த பின், இந்திய இராணுவத்தை நாட்டை விட்டு துரத்துவேன் என்று தேத்தலில் போது சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்ற புலிகளுடன் கூட்டு சேர்ந்தார்.
அதை பயன் படுத்த எண்ணிய புலிகள் பல சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புலிகளால் ஒரு அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதில் இந்திய இராணுவம் நாட்டை விட்டு போக வேண்டிய அவசியத்தையும், நான் மேற் கூறிய அழிவுகள் பல மடங்காகும் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தனர். அத்தோடு இந்திய அரசை தமிழர் நிலத்தில் தொடர்ந்து வைத்திருக்க யாரும் முற்பட்டால் அவர்கள் தமிழர் தேச விரோதிகளாகவே பார்க்கப்படும் என்று அறிவித்தார்கள்.
ஆனால் தொடர்ந்து புலிகள் அழிக்கப் படுவார்கள் என்னும் ராஜீவ் கொடுத்த நம்பிக்கையில் இந்திய அரசு வெளியேறக் கூடாது என்று அறிக்கைகளை வெளியிட்டார். இதை எதிர்பாக்காத புலிகள் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கூட்டமைப்பின் சுயநல அரசியலை விரும்பாதது பீற்றர் ஊடாக யோகேஸ்வரனிடம் தமது எதிர்ப்பையும் இரண்டாவது நேரடி எச்சரிக்கையையும் விட்டிருந்தனர். வழமை போல அமிர்தலிங்கம் குழுவினர் அதை உதாசீனம் செய்து தமது நடவடிக்கையை தொடர்ந்தனர்.
அத்தோடு பின் கதவால் பாரலமன்றத்துக்குள் நுழையும் முயட்சியிலும் ஈடுபட்டிருந்தார். இதையும் புலிகள் வெறுத்தனர். மீண்டும் புலிகள் யோகேஸ்வரனிடம் (பீற்றர் ஊடாக) தலைவரை வன்னி வந்து சந்திக்கும் படி கேட்கப் பட்டது. அதற்கு அமிதலிங்கம் குழுவினர் மறுப்பு தெரிவித்து தங்களை வேண்டுமானால் வந்து சந்திக்கும் படி பதில் கொடுத்தனர். அபோது இந்திய இராணுவம் நாட்டை விட்டு போகவேண்டும் என்று ஈரோஸ் அமைப்பு விட்டது போல அறிக்கை ஒன்றை விடுமாறு மீண்டும் கோரப்பட்டது.
காரணம் அந்த நேரத்தில் சிங்கள தேசம் இந்திய அரசை வெளியேருமாறு நேரடியாக கோரிய போது, தமிழர் தரப்பில் ஆயுதம் அற்ற அமைப்பாக இருந்த ஒரே காரணத்துக்காக, மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சியாக இருந்த போதும் சர்வதேசத்தில் இந்திய அரசின் பொய் பிரசாரங்களை முறியடிக்கவே இந்த கோரிக்கை புலிகளால் விடப்பட்டது. அதையும் கூட்டமைப்பினர் முற்றாக நிராகரித்து இந்திய இராணுவம் போகக் கூடாதென்று அறிக்கை விட்டார். நண்பர்களே இந்த சம்பவங்களின் ஊடே நீங்கள் இவர்கள் ஏன் துரோகம் இழைத்தார்கள், என்னத்துக்காக இவர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதற்கான விடையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
புலிகளை உதாசின படுத்தி தங்கள் அரசியல் சுயநலத்துக்காக, புலிகளின் கோரிக்கையை முற்றாகவே நிராகரித்து விட்டனர். (இந்திய இராணுவத்தின் துணை இருப்பதன் தையிரியத்தில்) மீண்டும் புலிகள் அமிர்தலிங்கத்தை நேரில் சந்தித்து கதைக்க விரும்பினர். உண்மையை சொல்வதானால் நேரில் எச்சரிப்பது கேட்காது போனால் தண்டனை வழங்கும் முடிவை புலிகள் எடுத்திருந்தனர்.
அதன் படி அந்த நேரத்தில் புலிகளின் உளவுத்துறைக்கு பொறுப்பாளராக இருந்த மேஜர்.விசுவண்ணா தலமையில் (விசுவண்ணாவின் வீரச்சாவின் பின் சலீம் என்பவர் புலனாய்வுத்துறையின் பொறுப்பாலராக நியமிக்க பட்டார். அதன் பின்பு தான் 1990இன் ஆரம்பத்தில் புலனாய்வு துறையை விஸ்த்தரிக்கும் நோக்கில் அவரிடமிருந்து பொட்டுஅம்மான் அந்த பொறுப்பை எடுத்திருந்தார்) ஐந்து பேர் கொண்ட அணியொன்று கொழும்புக்கு புறப்பட்டது.
இதில் ஒரு வயது குறைந்த போராளி ஒருவர் இரண்டு குண்டுகளுடன், “கொழும்பு புல்லர்ஸ் லேனில்” அமைந்திருந்த காரியாலய வீதியின் 100m தூரத்தில் (அந்த முனையில் இருந்து தான் பொலிஸ் உதவி கிடைக்கும் என்று எதிர் பாக்கப் பட்டது. ஒரு துவிச்சக்கர வண்டியுடன் நிக்க வேண்டும். உதவிக்கு வரும் பொலிஸ் குண்டை அடித்து அவர்களை தாமதப் படுத்தி விட்டு இவர் குறிப்பிட்ட இடத்திற்கு தப்பி போக வேண்டும். அந்த சந்தர்ப்பம் அந்த போராளிக்கு கிடைக்கவில்லை.
இன்னுமொரு போராளி அடுத்த முனையில் ஒரு காருடன் காத்திருப்பார் இவர்கள் வேலை முடித்து தப்பி வந்ததும் அந்த காரில் ஏறி தப்புவதற்காக காத்திருபார். இது தான் திட்டம். அதன் படி 13/07/1989 அன்று மாலை 7மணி போல் (வியாழக்கிழமை என்று நினைக்கின்றேன்) ஒருவரும் அறியா வண்ணம் ஒரு வாடகை காரில் மூவர் வந்து இறங்கினர்.
அதன் படி இவர்களை கண்ட யோகேஸ்வரன் அலுவலகத்தின் மாடியில் இருந்த விருந்தினர் அறைக்கு கூடிச் சென்றார். அங்கு வந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் ஆகியோருடன் மேஜர்.விசுவண்ணை, கப்டன்.அறிவண்ணை, மற்றும் 2ம் லெப். பீற்றர் (அலோசியஸ்) ஆகியோர் தங்கள் இறுதிக் கோரிக்கையாக துரோகிகளின் கூட்டமைப்பில் இருந்து வெளிவர வேண்டும், அடுத்தது இந்திய அரசை வெளியேறும் படி கோரவேண்டும் என்பதே. அதை உடனேயே அமிதலிங்கம் மறுத்தார்.
அபோது அங்கிருந்து அறிவண்ணை கீழ் தளத்துக்கு சென்றார். அதாவது முதல் வேட்டொலி கேட்ட உடன் இரண்டு காவலாளிகளையும் இவர் சுடவேண்டும். ஆனால் எதிர் பாராத சம்பவமாக அவரின் கைத்துப்பாக்கி வேலை செய்யவில்லை. அவரிடம் அந்த நேரத்தில் கையில் இருந்தது, இந்திய இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய “புரவ்னியம்”என்னும் வகையை சேர்ந்த கைதுப்பாக்கியாகும். அது வழமை போல பொறுத்த நேரத்தில் காலை வாரி விட அங்கிருந்து தப்பி வந்த இருவருடன் சேர்த்து மூவரும் காவலாளிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இதனால் வெளியில் இருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக தப்பி சென்றனர். அமிர்தலிங்கம்யோகேஸ்வரன் கொல்லப்பட்டனர்.சிவசிதம்பரம் படுகாயம் அடைந்தார். அதே நேரம் சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தையில் இருந்த பிரேமதாசவிட்கு இந்த சம்பவம் பற்றி அறிவிக்கப் பட்டது. அவரும் உடனே இது பற்றி புலிகளின் தூதுக் குழுவின் தலைவர் மாத்தையாவிடம் நேரடியாகவே கேட்க்கப் பட்டது. உடனே அவர் அதை மறுத்து விட்டு தாங்கள் தங்கி இருந்த ஹில்டன் கொட்டலுக்கு திரும்பி இருந்தனர்.
அடுத்த நாள் புலிகளிடம் இருந்து ஒரு மறுப்பறிக்கை வந்தது. காரணம் அந்த நேரத்தில் இதனால் பிரேமதாசாவுடனான பேச்சு வார்த்தையை குழப்ப விரும்பவில்லை புலிகள். அது குளம்பினால் இந்திய அரசை வெளியேற்ற முடியாது போய்விடும். அத்தோடு போராட்டமும் அழிந்து,மக்களும் அழிவார்கள் என்பதால் அந்த முடிவை புலிகள் எடுத்திருந்தனர்.
அதன் பின் இந்திய அரசு வெளியேறி சிங்கள அரசுடன் போர் ஆரம்பமாகி, இந்த சம்பவம் நடந்து ஒரு வருட நினைவு நாளன்று 13/07/1990அன்று இரவோடு இரவாக தமிழர் பிரதேசம் எங்கும் வீரச்சாவடைந்த மூவருக்கும் மேஜர்.விசு, கப்டன்.அறிவு, 2ம் லெப்.பீற்றர்/அலோசியஸ் ஆகியோருக்கு பதவி நிலைகளுடன் புலிகளால் உத்தியோக பூர்வமாக அஞ்சலி செலுத்தப் பட்டு தங்கள் மௌனத்தை புலிகள் அன்று கலைத்து அந்த வேங்கைகளுக்கு அஞ்சலியை செய்தனர். இதை தான் அரசியல் படு கொலை என்கிறார்கள். இது போலவே பல காரணங்களுக்காக பலர் அகற்றப் பட்டனர்.
– துரோணர்-