அப்பா பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதம் கார்த்திக்

பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலககுறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தது. மேலும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் பரவின.

கார்த்திக்கின் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு சரியான விளக்கத்தை கௌதம் கார்த்திக் பதிவு செய்துள்ளார். அவர் கூறும்போது, “என் அப்பா பற்றி கவலை கொண்டதற்கு நன்றி. அவர் சாதாரண பரிசோதனைக்காகத்தான் சென்றார். இதய கோளாறு அல்ல. இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்பா நலமாக இருக்கிறார்’ என்றார்.

கௌதம் கார்த்திக் இவ்வாறு கூறியது கார்த்திக் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Related Posts